இமாச்சல பிரதேசத்தில் சிக்கி பரிதவிக்கும் பிரபல நடிகை

Report Print Basu in பொழுதுபோக்கு

கடும் மழை மற்றும் வெள்ளத்தைத் தொடர்ந்து இமாச்சல பிரதேசத்தில் மோலிவுட் நடிகை மஞ்சுவாரியர் உட்பட 30 பேர் கொண்ட திரைப்படக் குழுவினர் சிக்கித் தவிக்கின்றனர்.

இமாச்சல பிரதேசத்தில் நிலவி வரும் மோசமான காலநிலை காரணமாக 25 பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவு காரணமாக 500-க்கும் மேற்பட்டோர் பரிதவித்து வருகின்றனர். 100 கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சனல் குமார் சசிதரன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு கடந்த 10 நாட்களாக இமாச்சல பிரதேசத்தின் சத்ரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது. வெள்ளத்தைத் தொடர்ந்து சத்ருவுக்கான சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் குழுவினர் சிக்கிக்கொண்டனர்.

நேற்று இரவு சேட்டிலைட் தொலைபேசி மூலம் மஞ்சுவாரியர், தனது சகோதரரை தொடர்பு கொண்டு நடந்த விவரங்களை கூறியுள்ளார்.

இதையடுத்து கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் முரளிதரனுக்கு தகவல் அளித்து அவர் இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாகூருக்கு தகவல் அனுப்பியுள்ளார். நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட மலையாள படக்குழுவினரை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்