கடவுளின் தேச மக்களுக்கு நடிகர்கள் சூரியா, கார்த்தி வழங்கிய நிதியுதவி!

Report Print Abisha in பொழுதுபோக்கு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளா, கர்நாடக மாநிலங்களுக்காக நடிகர் சூரியா, மற்றும் கார்த்தி நிதியுதவி வழங்கி உள்ளனர்.

இந்தியாவில், சமீப காலத்தில் வடமாநிலங்களில் பெரும் மழை வெள்ளம் ஏற்பட்டு பெருத்த சேதம் உண்டானது. தொடர்ந்து, தற்போது தென் மாநிலங்களான கர்நாடகா, கேரளா, தமிழகத்தில் நீலகிரி ஆகிய பகுதிகளில் பெரும் மழை வெள்ள பாதிப்பு நிலவி வருகின்றது.

தற்போதுவரை கேரளா, கர்நாடக மாநிலங்களில் வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் சிக்கி நூற்றுக் கணக்கனோர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரளாவில் தற்போதும் தொடரும் மழையால் கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் ஆரஞ் எச்சரிக்கை (orange alert) விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடகா, கேரள மாநிலங்களுக்கு பிரபலங்கள் பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில், பிரபல திரைப்பட நடிகர்களான சூரியா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து இரு மாநிலங்களுக்கும் தனித்தனியாக 10லட்டம் வீதம் நிதியுதவி வழங்கி உள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்