இந்த வெற்றிகளுக்கு அவர் தகுதியானவர்! ஐஸ்வர்யா ராய் வியந்து பாராட்டியது யாரை தெரியுமா?

Report Print Kabilan in பொழுதுபோக்கு
225Shares

நடிகர் அஜீத்குமார் அவர் பெற்றுள்ள வெற்றிகளுக்கு தகுதியானவர் என நடிகை ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராய், ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிப்பது தனக்கு பெருமையாக இருப்பதாக தெரிவித்தார்.

அதன் பின்னர் நடிகர் அஜீத்குமாரை புகழ்ந்து பேசினார். அவர் கூறுகையில், ‘அவர் மிகவும் இரக்க குணம் உள்ளவர் மற்றும் அவரது தொழிலில் நிபுணராகவும் உள்ளார். அவரது வெற்றிகளைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

ரசிகர்களிடம் இருந்து அவர் அன்பை பெறுகிறார். அதற்கு அவர் தகுதியானவர். அவருடன் அதிக காட்சிகளில் நான் நடிக்கவில்லை, படபிடிப்பு தளத்தில் மட்டுமே அவரை சந்தித்தேன்.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படப்பிடிப்பில் அவரது குடும்பத்தை சந்தித்தது எனக்கு நினைவிருக்கிறது. அவர்களுடன் மிகவும் மகிழ்ச்சியான தருணங்களை கழித்தேன்.

மீண்டும் ஒரே பாதையில் இருவரும் சந்திக்க நேரிட்டால், தகுதியான வெற்றியை அவர் பெற்றதற்கு நான் வாழ்த்த விரும்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்