ஒரு பதிவுக்கு குவியும் டொலர்கள்.. இன்ஸ்டாகிராமில் கலக்கும் பிரியங்கா சோப்ரா!

Report Print Kabilan in பொழுதுபோக்கு

2019ஆம் ஆண்டுக்கான இன்ஸ்டாகிராம் மதிப்பு மிக்க நபர்களின் பட்டியலில், நடிகை பிரியங்கா சோப்ரா 19வது இடத்தைப் பிடித்துள்ளார்.

Hopperhq என்ற நிறுவனம், இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் மதிப்பு மிக்க நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் பெரும்பாலும் இடம்பிடித்துள்ளனர்.

2019ஆம் ஆண்டுக்கான இந்தப் பட்டியலில், நடிகை பிரியங்கா சோப்ரா 19வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இவரை உலக அளவில் 43.4 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். எனவே, இவரின் பதிவுக்கு மதிப்பு அதிகரித்துள்ளது.

அதாவது, பிரியங்கா பதிவிடும் ஒவ்வொரு விளம்பர பதிவுக்கும் 2,71,000 டொலர்களை சம்பாதிக்கிறார். இது இந்திய மதிப்பில் ரூ. 1.86 கோடி ஆகும்.

பிரியங்கா சோப்ரா பல Skincare Brand மற்றும் Beauty Brand-களுடன் பார்ட்னர்ஷிப் வைத்துள்ளார். எனவே, இவை தொடர்பாக இவர் பதிவிடுவதற்கு பல டொலர்கள் கிடைக்கின்றன.

இந்தப் பட்டியலில் அமெரிக்க ஊடக பிரபலம் கெய்லி ஜென்னர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவர் ஒரு பதிவுக்கு இந்திய மதிப்பில் ரூ. 8.7 கோடி வருமானம் ஈட்டுகிறார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்