நம் நாட்டில் நல்ல கருத்துக்களை பேச சுதந்திரம் இல்லை.. இப்போது சூர்யாவுக்கும் நடந்துள்ளது! விஜய்யின் தந்தை

Report Print Kabilan in பொழுதுபோக்கு

புதிய தேசியக் கல்விக் கொள்கையை விமர்சித்த நடிகர் சூர்யாவுக்கு சிலர் கண்டனங்களை தெரிவித்த நிலையில், நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா சமீபத்தில் புதிய தேசியக் கல்வி கொள்கையை விமர்சித்து தனது கருத்தினை தெரிவித்தார். இதற்கு பல தரப்பில் இருந்து ஆதரவு வந்தாலும், ஒரு சாரார் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சூர்யாவுக்கு ஆதரவாக நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘நம் நாட்டில் நல்ல கருத்துக்களை பேசுவதற்கு சுதந்திரம் இல்லை, அது எல்லோருக்கும் நடந்துள்ளது. அது போலவே சூர்யாவிற்கும் நடந்துள்ளது. இருந்தாலும் இது போன்ற நல்ல கருத்துக்களை தொடர்ந்து எல்லோரும் பேச வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...