நீட் தேர்வு குறித்து பேசும்போது கோபத்தில் நடிகர் சூர்யா உதிர்த்த வார்த்தை.. கிளம்பிய சர்ச்சை!

Report Print Kabilan in பொழுதுபோக்கு

புதிய தேசியக் கல்விக் கொள்கை குறித்து விமர்சிக்கும்போது, நடிகர் சூர்யா கோபத்தில் தவறான வார்த்தை ஒன்றை பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அகரம் பவுண்டேசன் சார்பில் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 20 மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதன் பின்னர், நடிகர் சூர்யா மேடையில் பேசியபோது புதிய கல்விக் கொள்கை குறித்து விமர்சித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘இந்த கல்விக்கொள்கை இந்தியாவின் 30 கோடி மாணவர்களின் கல்வியை நிர்ணயிக்கும் ஒரு விடயம், அவர்களின் எதிர்காலத்தை மாற்றும் விடயம்.

அதைப் பற்றி பேசுவது என்பது நமது நாட்டின் வளர்ச்சி பற்றியும், நாட்டின் எதிர்காலத்தைப் பற்றியும் பேசும் விடயம். ஆனால், யாரும் இதைப்பற்றி ஏன் இன்னும் பேசவில்லை என்பது கோபமாக இருந்தது. பின்னர் அதற்கு தடையானது எது என்பது தெரிய வந்தது.

இதை எல்லாருக்கும் சேர்க்கும் ஒரு மேடை இருக்க வேண்டும். அதில் நான் இப்போது இருக்கிறேன். 20 ஆண்டுகளாக நடித்து வருவதால், நான் கூறுவது பலருக்கு போய் சேரும். இங்கு எல்லாருக்கும் இருக்கும் ஒரு கோபம் என்னவென்றால் தகுதித்தேர்வு, நுழைவுத்தேர்வு இதில் இருக்கும் கவனம் தரமான, சமமான மாணவர்களுக்காக செய்யப்படவில்லை என ஒரு பெரிய குற்றச்சாட்டு உள்ளது.

சமமான, தரமான கல்வியைக் கொடுக்காமல் எப்படி தரமான மாணவர்களை நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்? எப்படி நுழைத்தேர்வுகளுக்கு மட்டும் கவனம் செலுத்த முடியும்? அப்படி என்ன நேரமின்மை. ஏன் உடனே இதெல்லாம் நடந்துக்கிட்டிருக்கு? யாரும் இதைப்பற்றி பேசவில்லை என்பது பெரிய வருத்தமாக இருந்தது’ என தெரிவித்தார்.

ஒரு கட்டத்தில் அவர் கோபத்தில் முடியை குறிக்கும் மற்றொரு வார்த்தையை பயன்படுத்தினார். எனினும் உடனே அதற்கு அவர், தான் தவறான வார்த்தையை பயன்படுத்திவிட்டதாக கூறி மன்னிப்பு கேட்டார். இந்நிலையில், இந்த விடயம் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers