பிரபல தமிழ் பட இயக்குனர் பா. ரஞ்சித்தின் தந்தை மரணம்

Report Print Vijay Amburore in பொழுதுபோக்கு

பிரபல தமிழ் பட இயக்குனரான பா. ரஞ்சித்தின் தந்தை இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார்.

'அட்டகத்தி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பா. ரஞ்சித். அதன்பிறகு 'மெட்ராஸ்' எனும் படத்தை இயக்கி வெற்றி இயக்குனராக அடையாளம் காணப்பட்டார்.

அதனை தொடர்ந்து ரஜினியை வைத்து 'கபாலி' மற்றும் 'காலா' போன்ற பிரமாண்ட படங்களை இயக்கி மிகவும் பிரபலமானார்.

இவருடைய தந்தை M.பாண்டுரங்கன் (வயது 63), கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவர் இன்று அதிகாலை 2 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இன்று மாலை 5மணி அளவில் அவரது சொந்த ஊரான கர்லப்பாக்கத்தில் இறுதி ஊர்வலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers