தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு வேண்டுமென்றே உருவாக்கப்பட்டது! நடிகர் சித்தார்த்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து நடிகர் சித்தார்த் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தலைநகர் சென்னையிலும் தண்ணீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதன் காரணமாக, ஐ.டி நிறுவனங்கள் பணியாட்களை வீட்டில் இருந்தே பணி செய்ய அறிவுறுத்தியுள்ளன. உணவகங்களில் மதிய உணவு வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நடிகர் சித்தார்த் தண்ணீர் தட்டுபாடு குறித்து கோபமாக ட்வீட் செய்துள்ளார். அவர் கூறுகையில், ‘தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு வேண்டும் என்றே உருவாக்கப்பட்ட ஒன்று தான். இதன் பின்னணியில் மாஃபியாக்கள் உள்ளன. தண்ணீர் தட்டுப்பாடு நிலவ அரசு உதவி வருகிறது.

சமையல் எரிவாயுவுக்காக காத்திருப்பதைப் போன்று தண்ணீருக்க மக்கள் காத்திருக்கிறார்கள். மழை நீரை சேமிப்பதற்கான நிர்வாகத்திறன் அரசுக்கு இல்லையா?. நான் சிறுவனாக இருந்ததில் இருந்தே சென்னையில் தண்ணீர் லொறிகளை பார்த்திருக்கிறேன்.

இது சமீபத்திய பிரச்சனை அல்ல. மோசமான ஆட்சி காரணமாகவும், ஊழல் காரணமாகவும் இந்த பிரச்சனை கொடூரமாகி விட்டது. இங்கு தண்ணீர் கொள்ளை இருக்கிறது. இது தொடரும்... குடிமக்களின் போராட்டம் மட்டுமே இதற்கான தீர்வு. System கெட்டுப்போய்விட்டது!’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்