பிரபல தமிழ் நடிகர் கிரேசி மோகன் திடீர் மரணம்... அதிர்ச்சியில் திரைப்பிரபலங்கள்

Report Print Santhan in பொழுதுபோக்கு

தமிழ் திரையுலகின் மதிப்புமிக்க நடிகரான கிரேசி மோகன் நெஞ்சுவலி காரணமாக இன்று உயிரிழந்தார்.

கிரேசி மோகன் 1952ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். இவர் ஒரு காமெடி நடிகராக நமக்கு அறிமுகம் ஆனார். ஆனால் இவர் உண்மையில் இரு கதையாசிரியர். சென்னை இவர் யூனிவர்சிட்டியில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்தவர். 1972ஆம் ஆண்டு அந்த கல்லூரியில் தமிழ் மன்றத்திற்காக ஒரு கதை எழுதி நாடகத்தை அரங்கேற்றினார்.

தமிழ்த் திரையுலகில் கதை-வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் பணியாற்றி வருபவர். இது தவிர நாடக ஆசிரியராகவும் பணியாற்றுபவர். பல மேடை நாடகங்களை இயக்கி நடித்துள்ளார்.

அடிப்படையில் பொறியாளரான இவர் நடிகர் கமல்ஹாசன் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார்.

அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதியதைத் தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு கதை-வசன கர்த்தாவாக பணியாற்றியுள்ளார்.

முழுக்கவே நகைச்சுவையாக எழுதுவது இவரது சிறப்பு. இந்நிலையில், இவர் இன்று உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில், அவர் இறக்கவில்லை எனவும், சென்னை காவேரி மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் இறந்துவிட்டதாக திரைப்பிரபலங்கள் சிலர் சமூகவலைத்தளங்களில் தெரிவித்ததால், அதைக் கண்ட திரைப்பிரபலங்கள் இறந்துவிட்டாரா? இது உண்மையா? என்று அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பி வந்தனர்.

இதையடுத்து அவர் இன்று பிற்பகல் 2 மணிக்கு உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்