பிரபல நடிகர் காலமானார்.. ஒரு நாள் பொது விடுமுறை அறிவித்தது அரசு

Report Print Basu in பொழுதுபோக்கு

தமிழ், கன்னடம், இந்தி என பல மொழி படங்களில் நடித்த கர்நாடகாவை சேர்ந்த பிரபல மூத்த நடிகரும், நாடக ஆசிரியருமான கிரிஷ் கர்னாட், 81 வயதில் காலமானார்.

பெங்களுரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிரிஷ் கர்னாட், இன்று (யூன் 10ம்) திகதி காலை 6.30 மணிக்கு உயிரிழந்துள்ளார். 1998ம் ஆண்டு கன்னட மொழியில் ஞான பீட விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிஷ் கர்னாட்டின் மறைவை அடுத்து கர்நாடக மாநிலத்தில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டு, ஒரு நாள் பொது விடுமுறை விடப்படும் என அம்மாநில முதல்வர் குமாரசுவாமி அறிவித்துள்ளார்.

கிரிஷ் கர்னாட்டின் மறைவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். நாட்டில் நடிகர், கலைஞர்கள் என அனைத்து தரப்பினரும் கிரிஷ் கர்னாட்டின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் மொழி படங்களில் ரட்சகன், காதலன், செல்லமே போன்ற கமர்ஷியல் படங்களில் கிரிஷ் கர்னாட் நடித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்