20 ஆயிரம் சிறுவர்களுக்காக உலகம் முழுவதும் ஆதரவு திரட்டும் நடிகை!

Report Print Kabilan in பொழுதுபோக்கு

தென் அமெரிக்க நாடுகளில் தஞ்சமடைந்துள்ள வெனிசுலா சிறுவர்களுக்காக, ஹாலிவுட்டின் பிரபல நடிகை ஏஞ்சலினா ஜோலி சர்வதேச அளவில் ஆதரவு திரட்டி வருகிறார்.

ஹாலிவுட் திரையுலகின் பிரபல நடிகை ஏஞ்சலினா ஜோலி, புலம்பெயர்பவர்களுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் நல்லெண்ண தூதராகவும் உள்ளார்.

இந்நிலையில், இரண்டு நாட்கள் பயணமாக கொலம்பியா சென்றுள்ள அவர், புலம்பெயர்ந்தவர்கள் தங்கியிருக்கும் முகாம்களை பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து வெனிசுலாவில் இருந்து பெரு, கொலம்பியா மற்றும் ஈக்குவேடார் நாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ள 20,000க்கும் மேற்பட்ட சிறுவர்களின் நலன் குறித்து, கொலம்பிய ஜனாதிபதி இவான் டூக்கை சந்தித்து பேசினார்.

கர்தேகேனாவில் நடந்த இந்த சந்திப்பில், சிறுவர்களுக்கு குடியுரிமை கிடைப்பதற்கான வழிகள் குறித்தும் ஜனாதிபதியுடன் ஆலோசனை நடத்தினார் ஏஞ்சலினா ஜோலி.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்