விஷால் அணி பிரிகிறதா?... தேர்தலில் எதிர்த்து போட்டியிடுபவர் இவர்தான்..!

Report Print Abisha in பொழுதுபோக்கு

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷாலை எதிர்த்து போட்டியிடும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பக்கம் சிலர் செல்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், கடந்தமுறை போட்டியிட்ட விஷாலின் பாண்டவர் அணி இந்த முறையும் களம்காண்கின்றது.

பாண்டவர் அணியின் சார்பில் தலைவராக நாசர், பொருளாளராக கார்த்தி மற்றும் பொதுச் செயலாளர் பதவிக்கு விஷால் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் பாண்டவர் அணியை எதிர்த்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் களம்காண்கின்றார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலை எதிர்த்து ஐசரி கணேசும் துணைத் தலைவர் பதவிக்கு நடிகர் உதயாவும் போட்டியிடவுள்ளனர். தலைவர் பதவிக்கு, பாக்கியராஜ் போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், நடிகர்கள் விக்னேஷ், ஆர்.கே.சுரேஷ், நடிகைகள் ராதிகா, குட்டி பத்மினி ஆகியோரும் போட்டியிடுவார்கள் என தெரிகிறது.

இதனிடையே, குறிப்பாக விஷால் அணியில் இருந்து, சிலர் ஐசரி கணேஷ் அணிக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது விஷாலுக்கு பலத்த அடியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்