பிரான்ஸ் திரைப்பட விழா.. காஞ்சிபுரம் சேலை அணிந்து அசத்திய பாலிவுட் பிரபலம்! வைரலாகும் புகைப்படம்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

பிரான்சில் தொடங்கியுள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில், பாலிவுட் பிரபலம் கங்கனா ரனாவத் அணிந்து வந்த காஞ்சிபுரம் புடவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 14ஆம் திகதி பிரான்சில் தொடங்கியது. இந்த விழாவில் தமிழ்நாட்டில் இருந்து பார்வையாளராக விக்னேஷ் சிவனும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் கலந்துகொண்டுள்ளனர்.

இதற்கிடையில் பிரபல பாலிவுட் நடிகைகளான தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, கங்கனா ரனாவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் இவர்கள் அணிந்து வந்த ஆடைகள் அனைவரது கண்களையும் கவர்ந்தது.

குறிப்பாக, கங்கனா ரனாவத் இம்முறை காஞ்சிபுரம் புடவை அணிந்து விழாவுக்கு வந்திருந்தார். அவர் புடவையில் வந்திருந்தது காண்போரை வெகுவாக கவர்ந்தது.

மேலும் அவரது புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த கேன்ஸ் திரைப்பட விழா வரும் 25ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...