இளவரசி டயானாவால் ஈர்க்கப்பட்ட மேகனின் தோழி பிரியங்கா சோப்ரா

Report Print Vijay Amburore in பொழுதுபோக்கு

கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, மறைந்த பிரித்தானிய இளவரசி டயானா அணிந்திருந்த உடையை போலவே தன்னுடைய ஆடையையும் வடிவமைத்திருந்துள்ளார்.

திரையுலகமே பெரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 72-வது `கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா', மே 14-ம் திகதியன்று பிரான்சில் கோலகமாக துவங்கியது.

இதில் உலகெங்கிலும் உள்ள திரையுலகை சேர்ந்த பல்வேறு நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

இதில் முதன்முறையாக கலந்துகொள்ளும் வாய்ப்பினை பிரித்தானிய இளவரசி மேகனின் நெருங்கிய தோழியான பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா பெற்றிருந்தார். பிரியங்கா சோப்ரா நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பாக, மறைந்த இளவரசி டயானாவின் புகைப்படம் ஒன்றினை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அந்த புகைப்படமானது 1987 ஆம் ஆண்டு இளவரசர் சார்லஸுடன் இணைந்து, இளவரசி டயானா திரைப்பட விழா ஒன்றில் கலந்துகொண்ட போது எடுக்கப்பட்டது.

அதனை பார்த்த திரைபிரபலங்கள் உட்பட இணையதளவாசிகள் பலரும் கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர்.

அந்த படத்தை பதிவிட்ட அடுத்த சில மணி நேரங்களில், கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு வந்த பிரியங்கா சோப்ரா, இளவரசி அணிந்திருந்ததை போன்ற அதே மொடல் உடையில் வந்து அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers