சத்யராஜ் தான் காரணமா? ரசிகருக்கு பதிலளித்த நடிகை விசித்ரா

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

நடிகை விசித்ரா மீண்டும் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தமிழில் முன்னணி நடிகையாக வராததற்கு நடிகர் சத்யராஜ் தான் காரணம் என்று கருத்து தெரிவித்த ரசிகருக்கு பதில் அளித்துள்ளார்.

1990 களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்தவர் நடிகை விசித்ரா. திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திக்கொண்ட விசித்ராவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் மீண்டும் இவர் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகிள்ள நிலையில், சமூகவலைதளமான டுவிட்டர் பக்கத்திலும் இணைந்துள்ளார்.

டுவிட்டரில் ரசிகர் ஒருவர், தமிழில் முன்னணி கதாநாயகியாக வந்திருக்க வேண்டியது. சத்யராஜ் மாம்ஸால போய்டுச்சு” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலளித்துள்ள நடிகை விசித்ரா, எனது திறமையின் மீது சத்யராஜ் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். இயக்குநராக அவதாரமெடுத்த அவர் தனது முதல் படமான வில்லாதி வில்லன் படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரத்தை கொடுத்திருந்தார்.

அந்த நேரத்தில் தமிழ் சினிமாவில் வெளிவந்த ஒரேமாதிரியான படங்களின் போக்கு என்னை சில நல்ல பாத்திரங்களை ஏற்கவிடாமல் தடுத்துவிட்டது என பதிலளித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...