நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்விகபூர் இன்று வெளியிட்ட உருக்கமான புகைப்படம்... என்ன காரணம் தெரியுமா?

Report Print Santhan in பொழுதுபோக்கு

அன்னையர் தினமான இன்று நடிகை ஸ்ரீதேவியின் மகளும், நடிகையுமான ஜான்வி கபூர் வெளியிட்டுள்ள உருக்கமான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதிலும் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் அம்மாவுடன் எடுத்த புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், தனது தாயும், நடிகையுமான ஸ்ரீ தேவியுடன் இணைந்து தோன்றும் தனது பால்ய கால புகைப்படம் ஒன்றை, ஜான்வி கபூர் தனது இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார்.

காக்ரா சோலி ஆடை அணிந்து தோன்றும் அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், தாய்மார்களை போற்றிக் கொண்டாடவேண்டும் எனவும், அவர்கள் மீது அன்பு செலுத்தி அவர்களை கவனித்துக்கொள்ளவேண்டும் தனது அன்னையர் தின வாழ்த்துகள் என்று உருக்கமாக கூறியுள்ளார்.

View this post on Instagram

❤️💕💋

A post shared by janvi kapoor (@janhvi_kapoorr_) on

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers