திருமணம் செய்து கொள்ளமாலே குழந்தை பெற போகிறேன்... பிரபல திரைப்பட நடிகர் சொல்லும் ஆச்சரிய காரணம்

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகரான சல்மான் கான் திருமணம் செய்து கொள்ளாமலே குழந்தை பெற்றெடுக்க முடிவு செய்துள்ளார்.

இந்தி திரையுலகின் மிகப் பிரபலமான நடிகரான சல்மான்கான், 50 வயதையும் கடந்து சினிமா துறையில் நீடிக்கும் இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இருப்பினும் சர்ச்சை வழக்குகளில் அடிக்கடி சிக்கும் இவரிடம், பத்திரிக்கையாளர்கள் எப்போதும் கேட்கும் கேள்வி அவரது திருமணத்தைப் பற்றியே இருக்கும்.

திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் இவர், பல நடிகைகளுடன் காதல் கொண்டுள்ளார். குறிப்பாக ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைப், சங்கீத பிஜிலானி போன்றவர்களை காதலித்தார்.

ஆனால் இவர்கள் யாரையும் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

இந்நிலையில் சல்மான் கான் தற்போது வெளிநாட்டு பெண் ஒருவரை காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில், சல்மான் வாடகை தாய் மூலம் குழந்தை பெற போவதாக கூறப்படுகிறது.

இப்படி குழந்தை பெறுவதற்கு பதில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கேட்ட போது, அவர் திருமணம் செய்வதெல்லாம் இப்போது ஆடம்பரமாகிவிட்டது.

லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் செலவு செய்து திருமணம் செய்கிறார்கள். ஆனால், அதற்கு என்னிடம் பணம் இல்லை, அதனால் தான் நான் இன்னும் சிங்கிளாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்