விளையாடி கொண்டிருந்த போது திடீரென உயிரிழந்த பிரபல நடிகரின் குழந்தை... துடித்து போன நடிகர் மற்றும் குடும்பத்தார்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிரபல தொலைக்காட்சி நடிகர் பிரதீஷ் வோராவின் மகள் விளையாடி கொண்டிருக்கும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹிந்தி தொலைக்காட்சி தொடர்கள் பலவற்றில் நடித்து புகழ்பெற்றவர் பிரதீஷ் வோரா.

இவருக்கு 2 வயதில் அழகான மகள் உள்ளார். இந்த நிலையில் பிரதீஷின் மகள் பொம்மைகளை வைத்து கொண்டு தனது வீட்டில் விளையாடி கொண்டிருந்தாள்.

மகள் விளையாடுகிறாள் என்று கருதிய பிரதீஷின் மனைவி அவரது வேலையில் கவனம் செலுத்தி இருந்துள்ளார்.

அப்போது தான் வைத்து விளையாடிக் கொண்டிருந்த சிறிய பொம்மையை வாயில் போட்டு முழுங்கியுள்ளது அந்த குழந்தை. இதையடுத்து சிறிய அளவிலான பொம்மை குழந்தையின் மூச்சுக்குழலை அடைத்துள்ளது. இதையடுத்து, குழந்தை சுவாசிக்க சிரமப்பட்டு சில நிமிடங்களில் அதன் உயிர் பரிதாபமாக பிரிந்துள்ளது.

இந்தச் சம்பவம், பிரதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியிலும், மிகுந்த துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.

பிரதீஷ் குழந்தையின் மறைவுக்கு ரசிகர்களும் சக நடிகர், நடிகைகளும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers