கொலை செய்ய முயற்சித்தேனா? நடிகர் பார்த்திபன் விளக்கம்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

தன் மீது பொலிஸில் கொலை முயற்சி புகார் அளிப்பட்டதைத் தொடர்ந்து நடிகர் பார்த்திபன் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் மீது ஜெயங்கொண்டான் என்பவர் பொலிசில் புகார் அளித்தார். அவர் பார்த்திபனின் வீட்டில் 10 ஆண்டுகளாக வேலை பார்த்தவர் என்று கூறப்படுகிறது.

திருவான்மியூர் வீட்டில் கொள்ளை நடந்த பிறகு ஜெயங்கொண்டான் பணியில் இருந்து நீக்கப்பட்டார் என தெரிகிறது.

அவர் அளித்த புகாரில், தான் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணத்தை கேட்க சென்ற இடத்தில் பார்த்திபன் தன்னை அடித்து, மாடியில் இருந்து தள்ளி கொலை செய்யப் பார்த்ததாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுக்கு நடிகர் பார்த்திபன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘பார்த்திபன் கொலை செய்ய முயற்சி’ Humour sense-க்கு அளவுவே இல்லாமல் போய் விட்டது!

என் புகாரின் பெயரில் நேற்று மாலை ஆணையர் அலுவலகத்தில் நின்ற குற்றவாளி, இன்று காலை அதே அலுவலகத்தில் என் மீது புகார் செய்ய, அது எல்லா ஊடகங்களிலும் வர கவிஞனாக பிரபலமாகி விட்டார் ஒருவர். மகிழ்ச்சி! என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்