பிரபல தமிழ் நடிகையின் வீட்டிற்குள் புகுந்த இளைஞர் செய்த அதிர்ச்சி செயல்! விசாரணையில் தெரிந்த உண்மை

Report Print Santhan in பொழுதுபோக்கு

தமிழகத்தில் பிரபல சீரியல் நடிகையின் வீட்டிற்குள் புகுந்து அவரை தனக்கு திருமணம் செய்து வைக்கும் படி அவரின் தந்தையுடன் இளைஞர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி உள்ளிட்ட பல டி.வி. தொடர்களில் நடித்து வருபவர் நடிகை ரித்திகா.

இவர், சென்னை வடபழனி 100 அடி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

நேற்று காலை வாலிபர் ஒருவர், ரித்திகா வீட்டின் காலிங் பெல்லை அடிப்பதும், கதவை தட்டுவதுமாக இருந்தார். அப்போது வீட்டில் நடிகை ரித்திகா இல்லை. அவருடைய தந்தை சுப்பிரமணிதான் கதவை திறந்தார்.

அப்போது அந்த வாலிபர், நான், கோபிசெட்டிபாளையத்தில் இருந்து வருகிறேன். உங்கள் மகள் ரித்திகாவை எனக்கு மிகவும் பிடிக்கும். டி.வி. சீரியலில் பார்த்து அவரை நான் காதலிக்கிறேன். அவரை எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என கேட்டுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி, அந்த வாலிபரை அங்கிருந்து செல்லும்படி கூறினார். ஆனால் அதற்கு மறுத்த அவர், சுப்பிரமணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சத்தம் கேட்டதும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் வெளியே வந்தனர்.

அதன் பின் இந்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது. பொலிசார் அங்கு விரைந்து வந்து அவரை விசாரித்த போது, அவர் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த பரத் (22) என்பது தெரிந்தது.

என்ஜினீயரான இவர் நேற்று கோவா செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். ஆனால் விமானத்தை தவறவிட்ட அவர், நடிகை ரித்திகாவின் முகவரியை தெரிந்துகொண்டு அவரது வீட்டுக்கு சென்று அவரை தனக்கு திருமணம் செய்துவைக்கும்படி கூறி நடிகையின் தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வடபழனி போலீஸ் நிலையம் வந்த அவர்கள், தங்கள் மகன் அடிக்கடி மன அழுத்தத்தால் இதுபோன்ற செயல்களை செய்து வருவதாக தெரிவித்தனர்.

மேலும் இதுபற்றி நடிகை தரப்பில் இருந்து புகார் எதுவும் செய்யப்படாததாலும், அவர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாலும், பரத்தின் பெற்றோரிடம் எழுதி வாங்கிக்கொண்டு அவரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்