எந்த பிரதமரும் இப்படி அநாகரிகமாக பேசியதில்லை! மோடியை கடுமையாக விமர்சித்த நடிகர் சித்தார்த்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தின்போது, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் இறப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு, நடிகர் சித்தார்த் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, ராகுல் காந்தியின் தந்தை நேர்மையானவர், மிஸ்டர் கிளீன் என காங்கிரஸால் சித்தரிக்கப்பட்டவர். ஆனால், கடைசியில் அவரது வாழ்க்கை நம்பர்-1 ஊழல்வாதியாகத்தான் முடிவடைந்தது என்று பேசினார்.

அவரது இந்த விமர்சனத்திற்கு அரசியல் தலைவர்கள், பல்வேறு பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சித்தார்த் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘மோடி அவர்களே, ராஜீவ் காந்தியின் வாழ்க்கை இயல்பாக முடியவில்லை. அது வன்முறையால் முடிக்கப்பட்டது. புல்வாமாவில் நமது வீரர்கள் எப்படிக் கொல்லப்பட்டனரோ, அதேபோல் தான் ராஜீவும் கொல்லப்பட்டார்.

இதுவரை எந்தப் பிரதமரும் இவ்வளவு கீழ்த்தரமாக, நாகரிகமற்றுப் பேசியதில்லை. வேதனையும், வெட்கமும் ஆட்கொள்கிறது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers