டிரம்ப் அவர்களே ஒரு பேட்டி கிடைக்குமா? மோடியை கிண்டல் செய்த நடிகர் சித்தார்த்தின் ட்வீட்!

Report Print Kabilan in பொழுதுபோக்கு

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் பேட்டி எடுத்ததை கிண்டல் செய்யும் விதமாக, நடிகர் சித்தார்த் ட்வீட் செய்துள்ளார்.

சமீபத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் பிரதமர் நரேந்திர மோடியை பேட்டி கண்டார். அந்த பேட்டியை குறிப்பிட்டு மோடியை பலர் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.

குறிப்பாக, அக்‌ஷய் குமார் எடுத்த பேட்டி அரசியல் சார்பற்றது என்று பிரபலப்படுத்தப்பட்ட நிலையில், அந்தப் பேட்டிக்குப் பின்னர் அவரது குடியுரிமையை சுட்டிக்காட்டி கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அரசியல் சம்பந்தமாக ட்வீட்களை பதிவிடும் நடிகர் சித்தார்த், பிரதமர் மோடியின் பேட்டியை கிண்டல் செய்யும் வகையில் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் கூறுகையில்,

‘டிரம்ப் அவர்களே.. நீங்கள் மீண்டும் தேர்தலில் வெற்றிபெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் ஏன் என்னுடன் ஒரு நேர்காணலில் ஈடுபடக்கூடாது? உங்களிடம் கேட்க என்னிடம் மிக முக்கியமான கேள்விகள் இருக்கின்றன.

அதாவது, நீங்கள் என்ன பழம் சாப்பிடுவீர்கள்? எப்போது தூங்கச் செல்வீர்கள்? உங்கள் வேலை முறை எத்தகையது? அப்புறம் உங்களுடைய அழகான அந்த தனித்துவம் பற்றிக் கேள்விகள் தயாராக உள்ளன. ஒரு முக்கியக் குறிப்பு, என்னிடம் இந்திய பாஸ்போர்ட்டும் இருக்கிறது. தயவுசெய்து உங்கள் அனுமதிக் குறிப்பை அனுப்புங்களேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்