நடிகை மும்தாஜ் இறந்துவிட்டதாக வைரலான வதந்தி: முற்றுப்புள்ளி வைத்த குடும்பம்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

60 மற்றும் 70 களில் பாலிவுட்டை கலக்கிய முன்னாள் நடிகை மும்தாஜ் இறந்துவிட்டதாக வெளியான வதந்திக்கு அவரது குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

71 வயதான நடிகை மும்தாஜ் தற்போது மும்பையில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக மும்தாஜ் இறந்துவிட்டதா சமூகவலைதளங்களில் செய்தி வெளியானது. இதுகுறித்து அறிந்த இவரது குடும்பத்தினர் இயக்குர் மிலாப் ஜவேரி வழியாக இந்த போலியான செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

இயக்குனர் மிலாப் ஜவேரி தனது டுவிட்டர் பக்கத்தில், நடிகை மும்தாஜ் நலமாக இருப்பதாகவும், அவர் குறித்த வதந்திகளை சமூகவலைதளங்களில் பரப்புவதை நிறுத்திக்கொள்ளுங்கள். மும்தாஜின் குடும்பத்தை தொடர்ந்து அவர் குறித்த நலனை அறிந்துகொண்டேன் என பதிவிட்டுள்ளார்.

1977 ஆம் ஆண்டு வெள்ளித்திரையில் இருந்து விலகிய நடிகை மும்தாஜ், பின்னர் 1990 ஆம் ஆண்டு Aandhiyaan என்ற திரைப்படத்தில் மீண்டும் திரையுலகில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers