தனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்த விஷால்!

Report Print Kabilan in பொழுதுபோக்கு

திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க, தனி அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக விஷால் செயல்பட்டு வருகிறார். இந்த சங்கத்தில் 1,200 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களின் பதவி காலம் நாளையுடன் முடிவடைவதால், புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை நடத்துவது தொடர்பாக விரைவில் பொதுக்குழு கூடி முடிவு செய்ய இருக்கிறது.

முன்னதாக, விஷால் தலைமையிலான அணி ரூ.7 கோடி வரை சங்கத்தில் ஊழல் செய்து இருப்பதாக எதிர்த்தரப்பினர் புகார் கூறி வருகின்றனர். இதுதொடர்பான பிரச்சனையில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு பூட்டுப் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க வணிக வரித்துறை கூட்டுறவுத்துறை அதிகாரியை நியமித்தது. இந்நிலையில், அவரது நியமனத்திற்கு எதிராக தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று விஷால் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து, நாளைய தினம் இவ்வழக்கினை விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers