ராகவா லாரன்ஸ் மீது பெரிய மதிப்பு உள்ளது... தவறிருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.... சீமான் விளக்கம்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மற்றும் சீமானுக்கு எச்சரிக்கை விடுப்பதாக ராகவா லாரன்ஸ் கூறிய நிலையில் அது தொடர்பாக சீமான் விளக்கமளித்துள்ளார்.

நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது டிவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் ஒரு நீண்ட பதிவை வெளியிட்டார்.

அதில், தம்மை குறித்தும், தமது மாற்றுத்திறனாளி மாணவர்கள் குறித்தும் நாம் தமிழர் கட்சியினர், மிக மோசமாக பேசி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், அரசியலில் தாம் ஜீரோவாகத் தான் உள்ளதாகவும், தம்மை ஹீரோவாக்கி அரசியலில் இழுத்து விடாதீர்கள் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சமாதானமா? சவாலா? என்பதை முடிவு செய்துக்கொள்ளுங்கள் என சீமானுக்கு சவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இவ்விவகாரம் குறித்து பேசிய சீமான், லாரன்ஸ் கூறுவது போல் நடந்திருந்தால் தமது வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்து வரும் லாரன்ஸ் மீது தமக்கு பெரிய மதிப்புள்ளதாகவும், அவரை தவறாக விமர்சித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சீமான் தெரிவித்துள்ளார்.

மேலும், தமக்கு வேண்டாதவர்கள் சிலர் தமது பெயரை பயன்படுத்தி லாரன்ஸை விமர்சித்திருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers