தமிழ் பிக்பாஸ் 3-க்காக நடிகர் கமல் கேட்ட சம்பளம் மொத்தம் எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சியில் எண்டிமால் நிறுவனம்

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டு சீசன்களாக ஒளிபரப்பப்பட்டது.

இதில் தொகுப்பாளராக நடிகர் கமல்ஹாசன் இருந்து வந்தார். அவருக்காகவே பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வந்தனர்.

தற்போது மூன்றாவது சீசனுக்கான பேச்சு வார்த்தையை பிக்பாஸ் நடிகர்கள் மற்றும் நடிகைகளிடம் மும்பரமாக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

இதில் ஒரு சில நடிகைகளின் பெயர்கள் கூட வெளியானது, ஆனால் அதைப் பற்றி இன்னும் உறுதியான தகவல் வெளியாகாத நிலையில், இப்போது மீண்டும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

போட்டியாளர்கள் மாறிக் கொண்டே இருக்கின்றனர். ஆனால் தொகுப்பாளராக இருக்கும் கமல் மட்டும் எப்போதும் மாறக் கூடாது என்ற கோரிக்கை அப்போதிலிருந்தே போட்டியை நடத்தும் பிக்பாஸ் குழு மற்றும் விஜய் டிவிக்கு சென்று கொண்டிருந்தது.

அதுமட்டுமின்றி கமலும் இரண்டு சீசன்களை நன்றாக கொண்டு சென்றதால், மூன்றாவது சீசனிலும் அவரை தொகுப்பாளராக போட பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்தும் எண்டிமால் என்ற நிறுவனம் அவரை நெருங்கிய போது, அவர் கேட்ட சம்பளத்தைக் கேட்டு எண்டிமால் நிறுவனம் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கமல் ஒரு எபிசோடுக்கு ஒரு கோடி வீதம் 100 நாட்களுக்கு 100 கோடியை சம்பளமாக கேட்டுள்ளாராம். இதனால் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளது பிக்பாஸ்குழு கமலை தொகுப்பாளராக போடலாமா இல்லை வேறு ஏதாவது நடிகரை கமிட் செய்யலாமா என்று யோசித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்