நடிகர் ரித்தீஷ் உடலை பார்த்து கதறிய ஈழத்தமிழர் நடிகர் போண்டா மணி... அவர் வாரி தரும் வள்ளல் என புகழாரம்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

உதவி என யார் கேட்டாலும் நடிகர் ஜே.கே ரித்தீஷ் அள்ளி கொடுப்பார் என அவருக்கு பிரபல நகைச்சுவை நடிகர்கள் போண்டா மணி, விஜய் கணேஷ் ஆகியோர் புகழாரம் சூட்டியுள்ளனர்.

பிரபல நடிகரும் முன்னாள் எம்.பியுமான ஜே.கே ரித்தீஷ் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார்.

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் சதன் பிரபாகரன் ஆகியோருக்கு ஆதரவாக ரித்தீஷ் பிரசாரம் செய்து வந்தார்.

அவருடன் இணைந்து ஈழத்தமிழரான நகைச்சுவை நடிகர் போண்டா மணி, நடிகர்கள் விஜய் கணேஷ், சுப்புராஜ் ஆகியோரும் பிரசாரம் செய்து வந்தனர்.

இந்நிலையில் ரித்தீஷின் திடீர் மரணம் அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் உடலை பார்த்து கதறினார்கள்.

இது குறித்து போண்டா மணி உட்பட மூன்று நடிகர்களும் கூறுகையில், உதவி என யார் வந்தாலும் அள்ளிக் கொடுத்த வள்ளல் ரித்தீஷ், எங்களைப் போன்ற சிறிய கலைஞர்களுடன் எவ்வித வேறுபாடும் இன்றி பழகினார்.

ரித்தீஷை இழந்ததால் நிம்மதியின்றி தவித்து வருகிறோம் என கூறியுள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்