நடிகர் ரித்தீஷ் மரண செய்தி கேட்டு இதயம் நொறுங்கிபோனது.... எனக்கு உறுதுணையாக இருந்தார்: சீமான் உருக்கமான பேச்சு

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

நடிகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜே.கே. ரித்தீஷ் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இவரது உயிரிழப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது, எனது தம்பி ரித்தீஷ் இறந்துவிட்டார் என்ற தகவலை கேட்டு எனது இதயம் நொறுங்கிபோனது.

அவனது சிறுவயது வளர்ச்சியில் இருந்து நான் இருந்தவன். நிறைய கனவுகளோடு இருந்தவன். பல்வேறு சூழ்நிலைகளில் எனக்கு உறுதுணையாக இருந்தவன்.

அவனது இழப்பு நம்பமுடியாமல் இருக்கிறது. எப்படி இதனை ஆறுதல் படுத்திக்கொள்வது என்று தெரியவில்லை. இப்படி ஒரு பேரதிர்ச்சியான இழப்பினை எதிர்கொள்வேன் என நினைக்கவில்லை.

ரித்தீஷ்ஷின் பிள்ளைகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன் என கூறியுள்ளா.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers