உலகைப் பற்றிய எனது புரிதலை இந்திய மண் மாற்றிவிட்டது! பிரபல ஹாலிவுட் நடிகர் நெகிழ்ச்சி

Report Print Kabilan in பொழுதுபோக்கு

பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித், இந்தியாவில் பயணம் செய்தது குறித்து உருக்கத்துடன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட் திரையுலகில் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் வில் ஸ்மித். ‘பேட் பாய்ஸ்’, ‘ஐ ரோபோட்’, ‘மென் இன் பிளேக்’ போன்ற படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார்.

தற்போது உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, அந்த அனுபவத்தை ‘WillSmith's bucket list' எனும் பெயரில் வில் ஸ்மித் வீடியோ தொடராக வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இந்தியா வந்திருந்த வில் ஸ்மித், ஹரித்வார், தாஜ்மஹால் உள்ளிட்ட இடங்களுக்கு பயணம் மேற்கொண்டார்.

மக்களுடன் உரையாடிய அவர், மும்பை சாலைகளில் தனது நண்பருடன் ஆட்டோ ஓட்டி மகிழ்ந்தார். கங்கை ஆரத்தியில் கலந்துகொண்டு பூஜை செய்த வில் ஸ்மித், தயாரிப்பாளர் கரண் ஜோஹர், நடிகர் ரன்வீர் சிங் ஆகியோருடன் இணைந்து நடனமாடினார்.

இந்தியாவில் பயணம் மேற்கொண்டது குறித்து வில் ஸ்மித் கூறுகையில், ‘கடவுள் அனுபவம் வாயிலாகத்தான் உனக்கு கற்றுக்கொடுப்பார் என்று என் பாட்டி கூறியிருக்கிறார். இந்தியாவின் மாறுபட்ட கலாச்சாரம், அழகிய நிறங்கள், மக்கள், இயற்கையின் எழில் என்னை புது மனிதராக உணரச் செய்தது.

என்னைப் பற்றிய, என் கலையைப் பற்றிய, இவ்வுலகின் நிஜங்களைப் பற்றிய என் புரிதலை மாற்றியுள்ளது’ என தெரிவித்துள்ளார். தான் பயணம் செய்தது குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வில் ஸ்மித் பகிர்ந்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்