இலங்கை தமிழ்ச் சேனலில் கால்பதித்த 'நீங்கள் கேட்ட பாடல்' விஜயசாரதி

Report Print Arbin Arbin in பொழுதுபோக்கு

உலகமெங்கிலும் உள்ள தமிழர்களிடையே மிகவும் பிரபலமான நீங்கள் கேட்ட பாடல் நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம்வந்த விஜயசாரதி தற்போது இலங்கையில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

தமிழகம் மட்டும் இன்றி வெளிநாடுகளிலும் சென்று தொலைக்காட்சி நேயர்களைச் சந்தித்து, அவங்களுக்கு விருப்பமான பாடல் கேட்டுத் தொகுத்து வழங்கியவர் விஜயசாரதி.

மட்டுமின்றி பிரபலமான தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பாராட்டுகளை அள்ளியவர்.

சைத்தான் போன்ற படங்களிலும் சிறு வேடங்களில் நடித்துள்ளார் விஜயசாரதி.

தற்போது இலங்கையின் முக்கிய தொலைக்காட்சி ஒன்றின் தலைமைப் பொறுப்பில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தன்னால் இயன்ற புதுமையை அந்த தொலைக்காட்சியிலும் கொண்டுவர முயற்சிப்பதாக விஜயசாரதி தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...