பிரபல தமிழ் இயக்குனர் மகேந்திரன் மரணம்! மிகுந்த வேதனையுடன் பேசிய நடிகர் ரஜினி வீடியோ

Report Print Santhan in பொழுதுபோக்கு

சென்னை பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகேந்திரன் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 79. அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள் திரை உலக பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ரஜினி அவருக்கு அஞ்சலி செலுத்துவிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது மிகவும் வேதனையுடன் பேசினார்.

அதில் மகேந்திரனின் இழப்பு வேதனையானது, அவர் தற்போது இருக்கும் இயக்குனர்களுக்கு உதாரணமானவர். தமிழ் சினிமா இருக்கும் வரை அவருக்கு என்று ஒரு இடம் இருக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்