நடிகையை தவறாக தொட்டாரா ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர்: வைரலான வீடியோவால் சர்ச்சை

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

திருமண வரவேற்பின் நிகழ்ச்சியின் போது நடிகை ஊர்வசி ரவுட்டிலை தவறாக தொட்டதாக நடிகை ஸ்ரீதேவின் கணவரும், பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர் மீது எழுந்த விமர்சனத்திற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் ஊர்வசி.

தயாரிப்பாளர் Jayantilal Gada - வின் திருமண வரவேற்பில் தயாரிப்பாளர் போனி கபூர் கலந்துகொண்டார். அப்போது நடிகை ஊர்வசியுடன் இணைந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் போனி கபூர்.

அப்போது, நடிகை ஊர்வசியை போனி கபூர் தவறாக தொட்டதாகவும், இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார் என்ற வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

இந்த வீடியோவை பார்த்து பலரும், போனி கபூர் எதற்காக இப்படி நடந்துகொண்டார் என விமர்சனம் செய்தனர். இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில், இந்த செய்தியை குறிப்பிட்டு இது ஒரு செய்தியா? மரியாதை கொடுக்க தெரியாதவர்கள் பெண்களின் உரிமை மற்றும் பெண்களின் விடுதலை குறித்து பேசவேண்டாம் என பதிவிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers