இயக்குநர்களில் கதாநாயகராக விளங்கியவர் திரு மகேந்திரன்! இரங்கல் தெரிவித்த ஸ்டாலின்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

இயக்குநர் மகேந்திரனின் மறைவு பேரிழப்பு என தி.மு.க தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன்(79), சென்னையில் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில், மகேந்திரனின் மறைவிற்கு திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் இயக்குநர் மகேந்திரனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில்,

‘தமிழ்த் திரையுலக இயக்குநர்களில் கதாநாயகராக விளங்கியவர் இயக்குநர் திரு. மகேந்திரன். எளிமைக்கு இலக்கணம் - யதார்த்த சினிமா இயக்குநர் - வசனகர்த்தா - நடிகர் என பன்முகத் திறமை கொண்ட இயக்குநர் மகேந்திரனின் மறைவு பேரிழப்பு! அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்!’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்