போதை தலைக்கேறிய நிலையில் ஆடைகளை பிடித்து இழுத்து பிரபல நடிகை செய்த செயல்.... அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

குடிபோதையில் பொலிசாரின் ஆடைகளை பிடித்து இழுத்து அவர்களை தாக்கிய நடிகை ரூகி சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரபல நடிகையும், மொடல் அழகியுமான ரூகி சிங் இரு தினங்களுக்கு முன்னர் நள்ளிரவில் ஆண் நண்பர்களுடன் உணவகத்துக்கு சென்றார்.

அங்குள்ள ஊழியர்களுடன் குடிபோதையில் ரூகி தகராறு செய்த நிலையில் அங்கு வந்த பொலிசார் அவரை சமாதானப்படுத்த முயன்றனர்.

ஆனால் போதை தலைக்கேறிய நிலையில் இருந்த ரூகி பொலிசாரின் ஆடைகளை பிடித்து இழுத்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. பின் அங்கிருந்து புறப்பட்ட அவர், வாகனத்தை ஓட்டி சென்று சாலையில் நின்றிருந்த வாகனங்கள் மீது மோதியுள்ளார்.

இதையடுத்து நள்ளிரவு என்பதால் ரூகியை பொலிசார் கைது செய்யாமல், பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு மட்டும் பதிவு செய்தனர்.

மேலும், இரு தினங்களுக்குள் அவர் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்