10 வயது வித்தியாசத்தில் இளம் பாடகருடன் திருமணம்: 90 நாட்களில் விவாகரத்து செய்யும் நடிகை

Report Print Vijay Amburore in பொழுதுபோக்கு

திருமணம் முடிந்து 4 மாதங்கள் மட்டுமே ஆகியிருக்கும் நிலையில் பிரியங்கா சோப்ராவை, அவருடைய கணவர் நிக் ஜோனஸ் விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா வயதில் தன்னை விட 10 வயது சிறிய அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் திகதியன்று திருமணம் செய்துகொண்டார்.

வயது வித்யாசம் அதிகமாக இருப்பதால் இணையதளவாசிகள் பலரும் முணுமுணுக்க ஆரம்பித்தனர். அவர்கள் அனைவரின் வாயை அடைக்கும் அளவிற்கு தம்பதியினர் அடிக்கடி வெளியில் செல்லும் போது எடுக்கும் புகைப்படங்களை தங்களுடைய இணையத்தில் பதிவிட்டு வந்தனர்.

இந்த நிலையில் தம்பதியினர் இருவருக்கும் ஒத்துப்போகாததால் விரைவில் விவாகரத்து பெறவுள்ளதாக அமெரிக்கவை சேர்ந்த ஓகே பத்திரிக்கை நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆரம்பத்தில் பிரியங்கா சோப்ரா அமைதியான பெண் என்றும், தனக்கு ஏற்ற முறையில் நடந்துகொள்வார் என நினைத்து தான் நிக் திருமணம் செய்துள்ளார். ஆனால் திருமணத்திற்கு பின்னர் பிரியங்கா அடிக்கடி கோபமடைந்துள்ளார்.

திருமணம் முடிந்ததிலிருந்து எல்லாவற்றிற்கும் சண்டையிட ஆரம்பித்துள்ளனர். வேலை, பார்ட்டி, ஒன்றாக நேரம் செலவழிப்பது என அனைத்திற்கும் என்று அந்த பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.

தன்னுடைய கட்டுப்பாட்டில் கணவரை வைத்திருக்க பிரியங்கா நினைப்பதால் அவரை புரிந்து கொள்ள முடியாமல் நிக் திணற ஆரம்பித்துள்ளார். மேலும் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இளம்பெண் போல பிரியங்கா நடந்துகொள்வதாலே அவரை விவகாரத்து செய்ய நிக் குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளதாக அந்த நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers