விஷால்-அனிஷா நிச்சயதார்த்தம்..மோதிரம் மாற்றிய போது உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய வீடியோ

Report Print Santhan in பொழுதுபோக்கு

நடிகர் விஷால் மோதிரம் அணிந்த போது, அனிஷா உணர்ச்சியை அடக்க முடியாமல் கண்கலங்கிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல திரைப்பட நடிகர் அனிஷா-விஷாலின் திருமண நிச்சயதார்த்தம் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.

இவர்களின் இந்த நிச்சயதார்த்த விழாவிற்கு திரைப்பிரபலங்கள், நண்பர்கள், உறவினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

அது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகின.

இந்நிலையில் விஷால், அனிஷாவிற்கு மோதிரம் போட்ட போது, அனிஷா அந்த மோதிரத்தை பார்த்துக் கொண்டே, உணர்ச்சியை அடக்க முடியாமல் கண்கலங்கிய படி விஷாலை கட்டியணைத்தார்.

அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இந்த ஜோடியின் திருமணம் வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் சென்னையில் நடக்கும் எனவும் நடிகர் சங்க கட்டிட பணிகள் முடிவடைவதற்காக விஷால் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்