இளையராஜாவின் இசையில் மயங்கி மேடையிலேயே கதறி அழுத கல்லூரி மாணவி! வீடியோ

Report Print Vijay Amburore in பொழுதுபோக்கு

இசைஞானி இளையராஜா பாடல் பாடியதை நேரில் பார்த்த கால்லூரி மாணவி ஒருவர், இசையில் மயங்கி தேம்பி அழுதுள்ள வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

சமீப காலமாகவே பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் இசைஞானி இளையராஜா, கிராமப்புற கலைகளை மீட்டெடுக்க வேண்டும் என்கிற விழுப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் சென்னை கிண்டி செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் இளையராஜா 75வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது தன்னுடைய இசைப்பயணத்தின் அனுபவங்கள் குறித்து இளையராஜா மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலித்துக்கொண்டே, பாடல்களையும் பாடி அசத்தினார்.

அந்த வரிசையில் ஒரு மாணவி கேட்டதன் பேரில், 'தென்ற வந்து தீண்டும் போது' பாடலை பாடினார். இதனை கேட்ட மாணவிகள் அனைவரும் உற்சாக குரல் எழுப்ப, ஒரு மாணவி மட்டும் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார்.

அதன் பிறகு, 'தென்பாண்டி சீமையிலே' பாடலை பாடுமாறு அதே மாணவி கோரிக்கை விடுக்க, அதனை ஏற்றும் இளையராஜா பாட ஆரம்பித்துவிட்டார்.

இந்த வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்