பொள்ளாச்சியில் நடந்த பயங்கரம்! முதல் முறையாக பேசிய இளையராஜா! என்ன சொன்னார் தெரியுமா?

Report Print Santhan in பொழுதுபோக்கு

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம் போன்று இனி ஒரு சம்பவம் நிகழ கூடாது என இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையை சீரழித்த இளைஞர்களின் செயல் தமிழகத்தை மட்டுமின்றி நாட்டையே உலுக்கியுள்ளது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு மரணதண்டனை தான் சரியானது திரைப்பிரபலங்கள் உட்பட பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இசைஞானி இளையராஜா சென்னை கிண்டியில் இருக்கும் செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் தனது 75 வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவிகள் மத்தியில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.

அங்கு மாணவிகளின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை கண்டுகளித்த அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பொள்ளாச்சி விவகாரம் குறித்து கேட்ட போது ஒட்டு மொத்த மக்களின் எண்ணம் தான் தன்னுடைய எண்ணம் என்று கூறினார்.

மேலும் அவர் சிறு வயதில் சொந்த ஊரில் இருந்து சகோதரருடன் சென்னைக்கு வர முடிவு செய்து தனது தாயாரிடம் பணம் கேட்ட போது, வீட்டில் இருந்த ரேடியோவையும், புடவையையும் விற்று அதன் மூலம் 800 ரூபாயை தங்களுக்கு கொடுத்ததாக மாணவிகளிடம் நெகிழ்ச்சியாக கூறினார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்