பொள்ளாச்சி விவகாரத்தில் தமிழகமே அதிர்ச்சியில் உள்ள நிலையில் இப்படியொரு விளம்பரம் தேவையா நடிகர் விஷால்?

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரம் கொழுந்துவிட்டு எரியும் நிலையில் நடிகர் விஷால் பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட கும்பல் 200 பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை நடந்த நிலையில் இது சம்மந்தமாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விஷால் செய்த காரியம் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

விஷால் தற்போது அயோக்யா படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அந்த படத்தில் அவர், 4 பேரை கொல்றதுக்கு 5 நிமிஷம் போதும். நடந்த கொடுமைக்கு அவங்கள தூக்கில் ஏத்தணும். அப்ப தான் இந்த மாதிரி வெறி பிடிச்சவனுங்க பொண்ணுங்கள தொடுவதற்கே பயப்படுவானுங்க என்று மிக மிக ஆக்ரோஷமாக பேசியுள்ளார்.

பொள்ளாச்சி சம்பவம் குறித்து விஷால் கடும் கோபத்தில் உள்ளார் என்று கூறி அவரின் பட வீடியோவை பி.ஆர்.ஓ.க்கள் ட்விட்டரில் வெளியிட்டனர்.

இதை பார்த்த நெட்டிசன்கள் கொந்தளித்து விளாசியதும் அதை அவர்கள் நீக்கிவிட்டனர்

எந்த நேரத்தில் படத்திற்கு விளம்பரம் தேடுவது என்று இல்லையா என்று விஷாலை பலரும் வறுத்தெடுத்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்