வாளைக் கொண்டு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ஸ்ரீதேவி மகள்! வைரலாகும் புகைப்படம்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், தன்னுடைய பிறந்த நாள் கேக்கை வாளால் வெட்டிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர், ‘தடக்’ என்ற படத்தின் மூலம் கடந்த ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, கன்ஜன் சக்சேனாவின் சுயசரிதை மற்றும் கரண் ஜோஹரின் படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய 22வது பிறந்தநாளை தந்தை போனி கபூர், தங்கை குஷியுடன் சேர்ந்து கொண்டாடினார். இதற்காக வாரணாசிக்கு சென்ற அவர், காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்றும், கங்கை ஆரத்தியைப் பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதற்கு முன்பாக கங்கை நதிக்கரையில் படகின் மூலம் மூன்று பேரும் பயணம் செய்தனர். அதன் பின்னர், தனது குடும்பத்தினருடன் தனது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடினார்.

ஜான்வி பிறந்தநாள் கேக்கை வாளைக் கொண்டு வெட்டினார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்