600 திரைப்படங்களுக்கு மேல் நடித்த பிரபல தமிழ் நடிகர் மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் டைப்பிஸ்ட்டு கோபு தனது 85வது வயதில் காலமானார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி முதல் விஜய், அஜித் வரை மூன்று தலைமுறை நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் டைப்பிஸ்ட் கோபு.

இவர் 600-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் நடித்துள்ளார்.

இவர் சென்னை அயப்பாக்கத்தில் மனைவி ராஜலட்சுமி, மற்றும் மகனுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் உடல் நிலை சரியில்லாமல் இருந்த கோபு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரின் இறப்புக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்