பேசுவதிலும் எனக்கு சிக்கல் ஆனது.. பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி ஜாக்குலினுக்கு ஏற்பட்ட நிலை!

Report Print Kabilan in பொழுதுபோக்கு

ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்கு குரல் வளம் மிகவும் முக்கியம் என்பதால் அதற்கான சிகிச்சையில் இருக்கிறேன் என பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி ஜாக்குலின் தெரிவித்துள்ளார்.

‘கலக்கப்போவது யாரு’ என்ற நகைச்சுவை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமானவர் தொகுப்பாளினி ஜாக்குலின். இந்நிகழ்ச்சியில் தொகுப்பாளர் ரக்‌ஷனுடனான இவரது காம்பினேஷன் பெரும் வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக ஜாக்குலின் பணியாற்றினர். இவரது குரல் தனி அடையாளமாக மாறியது. ரக்‌ஷனும், ஜாக்குலினும் காதலிப்பதாக எழுந்த வதந்திகளுக்கு, அவர் நண்பர் தான் என்று கூறி ஜாக்குலின் முற்றுப்புள்ளி வைத்தார்.

அதன் பின்னர், ஜாக்குலின் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளில் பலர் இவரை கலாய்த்தாலும், அதனை எளிதில் கடந்து போய்விடுவார். இதனால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். மேலும், நயன்தாராவுக்கு தங்கையாக ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நடித்து பாராட்டை பெற்றார்.

இந்நிலையில் நீண்ட நாட்களாக இருந்து வரும் சைனஸ் பிரச்சனை காரணமாக தற்போது ஜாக்குலின் தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், உடல் எடையைக் குறைக்க தீவிர உடற்பயிற்சியிலும் இறங்கியுள்ளார்.

இதுகுறித்து ஜாக்குலின் கூறுகையில், ‘ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்கு குரல் வளம் ரொம்ப ரொம்ப முக்கியம். அந்த குரலே சரியா வரலைன்னா எப்படி. அதனால்தான் சிகிச்சை எடுத்துட்டு இருக்கிறேன்.

ஒரு படத்திலும் கமிட் ஆகியிருக்கிறேன். பேசுவதிலும் எனக்கு சிக்கல் ஆனது. அதனால் தான் இந்த உடனடி சிகிச்சையில் இருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

‘கோலமாவு கோகிலா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஜாக்குலினுக்கு தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்