69 வயதில் தந்தையான பிரபல நடிகர்!

Report Print Kabilan in பொழுதுபோக்கு

பிரபல ஹாலிவுட் நடிகர் ரிச்சர்டு கெரே தனது 69வது வயதில் ஆண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார்.

1975ஆம் ஆண்டு முதல் ஹாலிவுட் படங்களில் நடித்து வருபவர் ரிச்சர்டு கெரே. முன்னணி நடிகராக வலம் வந்த இவர் அமெரிக்காவைச் சேர்ந்த மொடலும், நடிகையுமான சிண்டி கிராபோர்டை திருமணம் செய்தார்.

அதன் பின்னர் அவரை விவாகரத்து செய்த கெரே, 2002ஆம் ஆண்டு நடிகை காரே லோவெலை திருமணம் செய்து பின் 2016யில் விவாகரத்து செய்தார். இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

அதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு அலெஜாண்ட்ரா சில்வா என்ற பெண்ணை கடந்த ஆண்டு திருமணம் செய்தார். இந்நிலையில் இந்த தம்பதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தனது முதல் மகனுக்கு தற்போது 19 வயதாகும் நிலையில், ரிச்சர்டு 69வது வயதில் தந்தையாகியுள்ளார்.

Claude Medale/Getty Images

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers