பிரபல இயக்குநரின் மரணம்! நடிகர் சிரஞ்சீவி கண்ணீர் அஞ்சலி

Report Print Kabilan in பொழுதுபோக்கு

நடிகர் சிரஞ்சீவியின் ஆஸ்தான இயக்குநரான விஜயா பாப்பிநீடு உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.

பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் விஜயா பாப்பிநீடு என்கிற குத்தா பாப்பிநீடு சவுத்ரி(82). ஆரம்பத்தில் பத்திரிகை எழுத்தாளராக இருந்த இவர் சில நாவல்களை எழுதினார். அதில் ஒரு நாவல் ஜகத் ஜடேலு என்ற திரைப்படமாக எடுக்கப்பட்டது.

அதன் பிறகு வெளியுலகுக்கு அறியப்பட்ட விஜயா பாப்பிநீடு திரைப்பட இயக்குநராகி, 23 படங்களை எடுத்தார். அவற்றில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடித்த ‘கேங் லீடர்’, ‘கில்லாடி நம்பர் 786’, ‘மஹாதீருடு’ ஆகிய வெற்றிப் படங்களும் அடங்கும்.

இதன்மூலம் சிரஞ்சீவிக்கு ஆஸ்தான இயக்குநராக விஜயா பாப்பிநீடு இருந்தார். இந்நிலையில் பாப்பிநீடு சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்றைய தினம் காலமானார்.

அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்களும், திரையுலகைச் சேர்ந்தவர்களும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், அவரது வீட்டிற்கு சென்ற நடிகர் சிரஞ்சீவி தனது இரங்கலை தெரிவித்தார். விஜயா பாப்பிநீடுவின் இறுதிச்சடங்கு நாளை ஹைதராபாத்தில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers