சௌந்தர்யாவின் திருமண வரவேற்பில் அம்பானி...கவனம் ஈர்த்த மகன் வேத்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் செளந்தர்யா - விசாகன் திருமணம் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

லீலா பேலஸில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

விசாகன் தாலி கட்டும்போது செளந்தர்யாவின் மகன் வேத் அவரது மடியில் உட்கார்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்தில் சௌந்தர்யாவின் மகன் வேத் அதிக கவனம் பெற்றார். மாலை நடந்த திருமண வரவேற்பில் பாலிவுட் நடிகை கஜோல், இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானி தனது மனைவி நீதாவுடன் கலந்துகொண்டார்.

ரஜினிகாந்தின் நண்பர் முகேஷ் அம்பானி ஆவார். அம்பானி மகள் திருமணத்திலும் ரஜினி தனது மனைவியுடன கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers