என் மகன் மிகவும் அதிர்ஷ்டசாலி.. எனக்கு கிடைக்காதது அவனுக்கு கிடைச்சிருக்கு: நடிகர் சென்றாயன் உருக்கம்

Report Print Santhan in பொழுதுபோக்கு

நான் பிறந்த போது என்னை சிலருக்கு தான் தெரியும், ஆனால் இப்போது என் மகன் பிறந்ததை எல்லோரும் கொண்டாடுவதை பார்க்கும் போது அவன் உண்மையிலே அதிர்ஷ்டசாலி என்று காமெடி நடிகர் சென்றாயன் கூறியுள்ளார்.

பிரபல திரைப்பட நடிகரான சென்றாயன், பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது தனக்கு குழந்தை இல்லை என்பதால் பல கஷ்டங்கள் அனுபவித்ததாக, நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசனிடம் கூறி வருத்தப்பட்டார்.

அப்போது சென்றாயன் தான் ஒரு குழந்தையை தத்தெடுப்பதாகவும் கூறினார். இதைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருந்தே போது, அவரது மனைவி கர்ப்பமான செய்தியைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

இந்நிலையில் அவருக்கு நேற்று முன்தினம் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இதனால் எல்லையற்ற மகிழ்ச்சியில் இருக்கும் சென்றாயன் மனைவி கயல்விழி இது குறித்து பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், இந்த மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகளே இல்லை.

அறுவை சிகிச்சை மூலம் தான் என் மகன் பிறந்தான். இதனால் நான் மயக்கத்தில் இருந்தேன். அப்போது சென்றாயன் என் அருகில் வந்து நமக்கு மகன் பிறந்திருக்கிறான் என்று கூறியவுடன், இதுக்கு தானே நான்கு ஆண்டுகள் காத்திருந்தோம், அப்போதே துள்ளி குதித்து கத்த வேண்டும் என்பது போல் இருந்தது என்று கூறியுள்ளார்.

சென்றாயன் கூறுகையில், வார்டிற்குள் என்னை மருத்துவர்கள் அழைத்து சென்ற போது பதற்றம் இருந்தது. அப்போது மருத்துவர் உங்களுக்கு பையன் பிறந்திருக்கிறான் என்று சொன்னவுடன், கண்ணீல் ஆனந்த கண்ணீர் அப்படியே வந்தது.

பையனை கையில் தூக்கும் போது, இந்த உலகமே எனக்கு கிடைத்தது போல் இருந்தது. நான் பிறந்த போது எல்லாம் என்னை யாருக்கும் தெரியாது, ஊரில் இருக்கும் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.

ஆனால் இப்போது என் மகன் பிறந்ததை உலகமே கொண்டாடும் போது, அவன் மிக அதிர்ஷ்டசாலி என்று கூறியுள்ளார். மேலும் அவர் வாழ்த்துக்கள் தெரிவித்த ரசிகர்கள் மற்றும் பிரார்த்தனை செய்தவர்களுக்கு தன்னுடைய நன்றி என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers