என்னை குண்டு என கிண்டல் செய்வார்கள்... அவர்களுக்கு என் பதில்.. நடிகை குஷ்புவின் மகள் அதிரடி

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

சமூவலைதளங்களில் தன்னுடைய புகைப்படத்தை பார்த்து பலர் குண்டு என கிண்டல் செய்வார்கள் என நடிகை குஷ்புவின் மகள் அனந்திதா கூறியுள்ளார்.

இயக்குனர் சுந்தர் சி - நடிகை குஷ்பு தம்பதியின் மகள் அனந்திதா அதிகம் பேட்டிகள் கொடுக்க மாட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் பேட்டியளித்தார். அவர் கூறுகையில், என் அப்பாவை விட என் அம்மா தான் கண்டிப்பானவர்.

நான் என் புகைப்படத்தை சமூகவலைதளங்களில் பதிவிட்டால் என்னை குண்டு என கிண்டல் செய்வார்கள். ஆனால் இதையெல்லாம் நான் பெரிதாக கண்டுகொள்வதில்லை.

தங்கள் வாழ்க்கையில் எதுவும் பெரிதாக சாதிக்காதவர்கள் தான் இப்படியெல்லாம் விமர்சிப்பார்கள்.

நான் பொது இடங்களில் செல்லும் போது என்னிடம் புகைப்படம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்பார்கள், நானும் புகைப்படம் எடுத்து கொள்வேன்.

ஆனால் எனக்கு தெரியாமல் என்னை புகைப்படம் எடுப்பார்கள், இது எனக்கு பிடிக்காது.

புகைப்படம் வேண்டும் என்றால் என்னிடம் கேட்க வேண்டும், நான் சரி என்றால் எடுத்து கொள்ளலாம், இல்லையென்றால் விட்டுவிட வேண்டும்.

ஏனெனில் எனக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது.

நான் புகைப்படம் எடுத்து கொள்ள சம்மதிக்கவில்லை என்றால், உன் பெற்றோர் வாழ்வதே ரசிகர்களாகிய எங்களால் என கூறுவார்கள்.

இதுபோன்ற போக்கு எனக்கு பிடிக்காது என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers