திருமண உற்சாகத்தில் குடும்பத்துடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட நடிகர் ரஜினிகாந்த்

Report Print Vijay Amburore in பொழுதுபோக்கு

நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய இளையமகன் திருமண விழாவை முன்னிட்டு, குடும்பத்துடன் சேர்ந்து நடனமாடும் வீடியோ காட்சி இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் ஐஸ்வர்யாவிற்கும், பிரபல தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸில் நாளை திருமணம் நடைபெற உள்ளது.

இதை முன்னிட்டு, தனக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் முக்கியமான உறவினர்களை நேரில் சந்தித்து நடிகர் ரஜினி அழைப்பிதழை வழங்கி வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் ரஜினி தன்னுடைய மனைவி மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து முத்து படத்தில் இடம்பெற்றிருக்கும் "ஒருவன் ஒருவன் முதலாளி" பாடலுக்கு நடனமாடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers