நடிகர் தாடி பாலாஜி உண்மையில் அப்படிபட்டவரா? வியப்புடன் சொன்ன பிரபல செய்தி தொகுப்பாளினி காயத்ரி கிஷோர்

Report Print Santhan in பொழுதுபோக்கு

நடிகர் தாடி பாலாஜி பற்றி சில தவறான தகவல்கள் வந்து கொண்டிருந்த நிலையில், செய்தி தொகுப்பாளராக இருக்கும் காயத்ரி கிஷோர் அவரைப் பற்றி உண்மையில் நடந்த சம்பவம் ஒன்றை வியப்பாக கூறியுள்ளார்.

பிரபல திரைப்பட நடிகரான தாடி பாலாஜி பற்றி அவரது மனைவி நித்யா பல புகார்களை தொடர்ந்து கூறி வந்தார்.

இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாட்டு ஏற்பட்டது. ஆனால் தாடி பாலஜிக்கோ தன் மனைவி மற்றும் மகளுடன் ஒன்றாக இருக்கவே ஆசை என்று கூறி வருகிறார்.

ஆனால் அவர் அதிகமாக குடிப்பவர், மோசமானவர் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின, இந்நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் காயத்ரி கிஷோர் என்பவர் தாடி பாலாஜியைப் பற்றிய தகவலை பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

அதில், சில தினங்களுக்கு முன் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு காரில் குடும்பத்தினருடன் சென்று கொண்டிருந்தேன்.

அப்போது உளூர்ந்தூர் பேட்டை அருகில் இருக்கும் உணவகத்தில் சாப்பிட நின்றோம். அதன் பின் காரை எடுத்த போது, கார் ஸ்டார்ட் ஆகவில்லை.

இதனால் அங்கு வந்த தாடி பாலாஜியின் கார் ஓட்டுனர், அவருக்கு உதவ முன்வந்துள்ளார். அவர் முயற்சி செய்து கொண்டிருந்த போது, தாடி பாலாஜி அவரை அழைத்து ஒன்றும் பிரச்சனை இல்லை, மெதுவாக பார்த்துவிட்டு வா என்று கூறியுள்ளார்.

இது குறித்து காயத்ரி கிஷோர் கூறுகையில், முதலில் நான் அவர் டிரைவரை அழைக்கும் போது, நேரம் ஆகிவிட்டது, அதனால் தான் அவர் அழைக்கிறார் என்று நினைத்தேன், அதன் பின் அந்த ஓட்டுனர் மீண்டும் வந்து எங்களுக்கு உதவினார்.

இதனால் நான் காரின் உள்ளே இருப்பது யார் என்று கேட்ட போது, அந்த ஓட்டுனர் தாடி பாலாஜி சார் என்று சொன்னவுடன் வியந்துபோனேன்.

கார் தொடர்ந்து ஸ்டார்ட் ஆகாத காரணத்தினால், அந்த ஓட்டுனர் மெக்கானிக்கல் ஒருவருக்கு தகவல் கொடுத்துவிட்டு, அந்த ஓட்டுநர் தாடி பாலாஜியுடன் மீண்டும் புறப்பட்டார்.

ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களிலே மீண்டும் அந்த கார் வந்தது. அப்போது காரின் உள்ளே இருந்த தாடி பாலாஜி, தன்னுடைய காரின் கண்ணாடியை இறக்கி வேறு ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்டார்.

அந்த நேரத்தில் நான் நெகிழ்ந்து போனேன். என்னை யார் என்றே அவருக்கு தெரியாது. இருப்பினும் சக மனிதர்கள் பிரச்னையில் இருக்கும்போது உதவி செய்யணும்னு நினைக்கிறது பெரிய விஷயமா எனக்கு தெரிகிறது.

பிக்பாஸில் கூட அவரை பலரும் மிகவும் தாமதமாகவே தான் புரிந்து கொண்டார்கள். அதில் அவர் தன் குடும்பத்தினருடன் சேருவதற்கு எடுத்த முயற்சி நெகிழ்ச்சியானது, நான் கூட திரையில் தான் அப்படி நடிக்கிறாரோ என்று நினைத்தேன், ஆனால் நிஜத்திலும் எப்படிபட்டவர் என்பதை அவர் நிரூபித்துவிட்டார் என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்