எல்லோரும் கட்டாயம் கலந்துகொள்வதற்கு இது பள்ளி நிகழ்ச்சி இல்லை! கிண்டலாக பதிலளித்த நடிகர் விஷால்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

அனைத்து நடிகர்களும் கலந்து கொள்ளாததால், இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ்கள் கொடுக்கவில்லையா? என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு நடிகர் விஷால் கிண்டலாக பதிலளித்துள்ளார்.

இளையராஜா இசை நிகழ்ச்சி நடந்து முடிந்ததைத் தொடர்ந்து, நடிகர் விஷால் தமிழக முதல்வரை சந்தித்து பேசினார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அனைத்து நடிகர்களும் இளையராஜா இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லையே என பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பினர்.

அதற்கு பதிலளித்த விஷால் கூறுகையில், ‘இளையராஜா இசை திருவிழா வெற்றிகரமாக நடந்தது. இந்த விழாவில் அனைத்து நடிகர்களுக்கும் சரியான அழைப்பு சென்றது. இது பள்ளி நிகழ்ச்சி இல்லை கட்டாயம் அனைவரும் கலந்துகொள்வதற்கு.

இதற்கு முன்னால் காணாத கூட்டம் இரவு 12 மணி வரை இருந்தது. இதற்கான பாதுகாப்பை அரசு சிறந்த முறையில் அளித்தது. பார்த்திபன் அவர்களால் தான் இளையராஜாவையும், ஏ.ஆர்.ராகுமானயும் ஒரே மேடையில் பாட வைக்க முடிந்தது.

தமிழ் ராக்கர்ஸை தமிழக அரசு நினைத்தால் ஒரு நாளிலேயே தடை செய்ய முடியும். திருடனை பிடித்து விட்டு, விஷாலால் முடியவில்லை நான் பிடித்துவிட்டேன் என்று வசந்தபாலன் கூறியிருந்தால் பரவாயில்லை. அதை செய்யவில்லை.

தமிழ் ராக்கர்ஸை தமிழக அரசால் மட்டுமே தடுக்க முடியும். மேலும், அரசு பேருந்துகளில் புதிய படங்களை பயணிகளுக்கு காட்சியளிப்பது குறித்தும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சரிடம் கேட்டுள்ளோம்.

ஏற்கனவே அரசிடம் அளித்த கோரிக்கை மனுக்களை மீண்டும் அளித்தோம். குறிப்பாக தமிழ்மொழிப் படங்களின் வெளியீட்டின்போது மற்ற மொழிப் படங்கள் வெளியாகின்றன. அப்போது தமிழ் படங்களுங்கே அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்